தாங்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள் என கூறிக்கொள்ளும் சீன ராணுவம், லடாக் அருகே எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள பங்கோங் சோ பகுதியில் இந்திய வீரர்களுடன் ஏற்பட்ட மோதலின் போது, குச்சி, முள்கம்பி, கற்களை கொண்டு தாக்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், சீன வீரர்களின் நடவடிக்கை, காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய ராணுவம் மீது கற்களை கொண்டு எறிவது போல் இருந்தது. பன்காங் சோ ஏரி பகுதியில் ஏற்பட்ட இரு நாட்டு வீரர்களும் நேருக்கு நேர் மோதி கொள்ளும் நிலை ஏற்பட்டது. சீன வீரர்கள், குச்சிகள்,முள்கம்பி, கற்களை கொண்டு வந்தனர். எண்ணிக்கையில் சீன வீரர்கள் அதிகளவில் இருந்த போதும், இந்திய வீரர்களிடம் அவர்கள் பயிற்சி பெறாத வீரர்களை போல் நடந்து கொண்டனர். லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரை இரு நாட்டு வீரர்களிடம் நவீன ஆயுதங்கள் உள்ள போதிலும், அந்த பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ வேண்டும் என்பதற்காக கடந்த 1967 க்கு பிறகு ஒரு குண்டு கூட சுடப்படவில்லை.
எண்ணிக்கையில் அதிகளவு இருந்த சீன வீரர்கள், இந்திய வீரர்களை சுற்றி கொண்ட அவர்கள், கொடுமைக்காரர்கள் போல் நடந்து கொண்டனர். சீன பகுதியில் சிறந்த உள்கட்டமைப்பு உள்ளது. அங்கிருந்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு, வெட்டுக்கிளிகள் போல் அவர்கள் கூட்டமாக வந்தனர். ஆனால், இந்திய வீரர்கள் அவர்களை நடந்து கொள்ளவில்லை. அவர்களை இந்திய பகுதியில் இருந்து விரட்டுவதற்காக நமது வீரர்கள் தள்ளி விட்டனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
லடாக் அருகேயுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை சீனா குவித்துள்ளது. கடந்த 5 - 6 தேதிகளில் இரு வீரர்களும் நேருக்கு நேர் சந்தித்து மோதி கொண்வது நடந்தது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் வீரர்களை குவித்துள்ள சீன ராணுவம் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், சீனாவுக்கு இணையாக வீரர்களை குவித்து வைத்துள்ளது.


AthibAn Tv