
ஊரடங்கை தளர்த்துவது குறித்து, மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர், இ.பி.எஸ்., இன்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில், நான்காம் கட்ட ஊரடங்கு, வரும், 31ல், நிறைவடைய உள்ளது. தற்போது, ஊரடங்கு அமலில் இருந்தாலும், பல்வேறு தளர்வுகளை, அரசு அறிவித்து உள்ளது.சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில், ஆட்டோக்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
சலூன்கள் உட்பட அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பஸ்கள் இயக்கப்படாததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1 ல் ஊரடங்கு முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது. ஆனால், தினமும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஊரடங்கு குறித்து முதல்வர் இ.பி.எஸ்., தலைமை செயலகத்தில் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இந்த குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.


AthibAn Tv