Type Here to Get Search Results !

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இன்று முதல்முறையாக விண்வெளிக்கு தனது விண்கலம் மூலம் வீரர்களை அனுப்பி சாதனை

latest tamil news

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இன்று முதல்முறையாக விண்வெளிக்கு தனது விண்கலம் மூலம் வீரர்களை அனுப்பி சாதனை படைக்க உள்ளது. 9 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க வீரர்கள் தங்கள் சொந்த மண்ணில் இருந்து புறப்படுகின்றனர்.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இன்று இரவு இந்திய நேரப்படி 8.30 மணியளவில் ஸ்பேஸ் எக்ஸின் பால்கான் 9 ராக்கெட் விண்வெளிக்கு செல்கிறது. இதற்கான கவுன்டவுன் தொடங்கியது. இந்த ராக்கெட்டின் உச்சியில் விண்வெளி வீரர்கள் அமர்ந்து செல்லும் டிராகன் விண்கலம் உள்ளது. முதல் முறையாக தனியார் விண்கலம் மூலம் இதில் விண்வெளி வீரர்கள் பயணிக்க உள்ளனர். எலான் மஸ்க் கூறி வரும் விண்வெளிக்கான டாக்சி சேவையின் முன்னோட்டமாக இது பார்க்கப்படுகிறது.

ராக்கெட் ஏவுவதற்கு ஏற்ற 60% வானிலை நிலவுவதாக விண்வெளி மையம் கூறியுள்ளது. அப்போலோ விண்கலம் மூலம் நிலவுக்கு விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்ட அதே ஏவுதளத்திலிருந்து இன்று பால்கான் 9 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய உள்ளது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு நாசா தனது சொந்த ராக்கெட் மூலம் வீரர்களை அனுப்புவதை நிறுத்திக் கொண்டு, ரஷ்யாவின் ராக்கெட் மூலம் அனுப்பி வந்தது. இந்த நிலையில் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு தங்களது சொந்த மண்ணில் இருந்து ராபர்ட் பெஹன்கென் (49) டக்ளஸ் ஹர்லி (53) ஆகிய இரு மூத்த விண்வெளி வீரர்கள் செல்ல உள்ளனர். இதற்கான ஒத்திகைகள் கடந்த சனிக்கிழமை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.