இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.51 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 4,337 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,387 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்ட நிலையில், 170 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொலை பற்றி படிக்க : மீண்டும் ஒரு இந்து சாது படுகொலை | Once again a Hindu Sadhu massacre
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (மே.,27) காலை 9:15 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,45,380 ல் இருந்து 1,51,767 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,167 ல் இருந்து 4,337 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60,491 ல் இருந்து 64,426 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 83,004 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 6,387 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 170 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து 6வது நாளாக கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது.
மாநில வாரியாக பாதிப்பு விவரம்
மாநிலம் - பாதிப்பு - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 54,758 - 1,792
தமிழகம் - 17,728 - 127
குஜராத் - 14,821 - 915
டில்லி - 14,465 - 288
ராஜஸ்தான் - 7,536 - 170
மத்திய பிரதேசம் - 7,024 - 305
ஆந்திரா - 3,171 - 57
கர்நாடகா - 2,283 - 44
தெலுங்கானா - 1,991 - 57
கேரளா - 963 - 6



AthibAn Tv